பாகிஸ்தான் ஜன, 2
பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ள 631 இந்திய மீனவர்கள் மற்றும் இரண்டு கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்தியா கேட்டு கொண்டுள்ளது. மேலும் 30 மீனவர்கள் மற்றும் 22 கைதிகளுக்கு தூதரக உதவிகளை வழங்குமாறு வெளியுறவு அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய சிறையில் உள்ள 339 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்குமாறு அந்நாட்டு அரசும் கோரிக்கை வைத்துள்ளது.