லண்டன் ஜன, 1
லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அலோக் சர்மா உள்ளிட்ட 30 பேர் நைட் எனப்படும் இங்கிலாந்து மன்னரின் கௌரவ விருந்துக்கு தேர்வாகியுள்ளனர். 2023 ம் ஆண்டுக்கான பட்டியலில் இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 1,107 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 50 % பேர் பெண்கள் ஆவர். சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு நைட் விருது வழங்கப்படுகிறது.