சென்னை டிச, 30
இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் தொடங்கிய மார்கழி மங்கள இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், யுவன் சங்கர் ராஜா பா. ரஞ்சித் கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகும் என்று கூறினார். அதற்கு மேடையிலே பதிலளித்த யுவன் நான் தயார் என்றார். இதனால் இருவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.