சென்னை டிச, 30
பத்தாம் வகுப்பிற்கு பிறகு பிளஸ் டூ படிக்காமல் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என கோயம்புத்தூரை சேர்ந்த மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஆண்டுகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்க உத்தரவிட்டுள்ளது.