சென்னை டிச, 31
சென்னை தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ம் ஆண்டுக்கான யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் ஜனவரி 2 தேதி 2023 முதல் வழங்கப்படும். இதில் மாணவர்கள் நேரிலும் http://online.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாகவும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.