புதுடெல்லி டிச, 29
உலகம் முழுவதும் இன்று காலை 6.30மணி முதல் ட்விட்டர் சேவை முடங்கியுள்ளது. ஏற்கனவே லாகின் செய்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் புதிதாக ட்விட்டரில் லாகின் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதற்கான காரணங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.