மதுரை டிச, 29
வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் ஐந்து புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன எனவும் அவர் கூறினார்.