புதுடெல்லி டிச, 28
மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் 147 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இது பற்றி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ₹145 லட்சம் கோடியாக இருந்த கடன், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ₹147 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.