அரியலூர் டிச, 27
திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும் பேசினர். கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் கரும்பாயிரம் மற்றும் விவசாய சங்கத்தினர் வினோத்குமார், பொன்னிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலர் வரப்பிரசாதம் வரவேற்றார்.
மேலும் இக்கூட்டத்தில் விலைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். உரம் தட்டுப்பான்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் உர விலையை முறைபடுத்தி, கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமானூர் ஒன்றியத்தில் கூடுதலாக அரசு நெல்கொள்முதல் நலையம் அமைக்க வேண்டும். கீழப்பழுவூர், கரைவெட்டி, வெங்கனூர், கோக்குடி கண்டராதித்தம் போன்ற கிராமங்களிலுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.