புதுடெல்லி டிச, 27
உத்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்று படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்ட நடவடிக்கையாக 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கங்கை படுகையில் கழிவு நீரை அகற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.