புதுடெல்லி டிச, 27
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்ற கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி 2023 ம் ஆண்டுக்கான தேர்வு தேதி டிசம்பர் 15 ல் அறிவிக்கப்பட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வரை ஆண்களுக்கு 650 ரூபாய் வசூலிக்கப்பட்டது தற்போது 1000 ரூபாயாகவும் பெண்களுக்கு ரூ.325 ஆக இருந்த கட்டணம் ரூ.800 உயர்த்தப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.