திருப்பூர் டிச, 26
திருப்பூர் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே இந்தியன் சார்பாக ஜீவா காலனி தனியார் திருமண மண்டபத்தில் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் ரங்கசாமி தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஜப்பான் மாஸ்டர் யூ .எஸ். கே. யூ .ஹன்ஷி. கெனிச்சி புகாமிஷு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் அவர் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் , தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் குமுத்தே, டெக்னிக், கட்டா போன்ற சிறப்பு பயிற்சியினை அளித்தார்.
பயிற்சி முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.