Spread the love

துபாய் டிச, 26

ஐக்கிய அரபு அமீரக துபாயில் தொடங்கியிருக்கும் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நிறுவனத்தின் சேர்மன் கார்த்திக் குமார், நிர்வாக இயக்குனர் நீரோ மனநல ஆலோசகர் டாக்டர் மோனிகா ரோஷினி மற்றும் நிறுவன ஆலோசகர் Fuji Japan சதீஸ் ஆகியோருடன் மரியாதை நிமித்த சந்திப்பு ASR Charted Accounts நிறுவனத்தின் நிறுவனர் சோனு ராம் மற்றும் தொழிலதிபர் வெங்கட் தலைமையில் கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், வணக்கம் பாரதம் தமிழ் வார இதழ் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா உள்ளிட்டோருடன் நடைபெற்றது.

இச்சந்திப்பில் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு நிறுவனம் மென்மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்நிறுவனம் உலகளவில் பல்வேறு திறமையாளர்களின் திறமைகளை ஆய்வுசெய்து அவர்களுக்கான உலகளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கான உலக சாதனை சான்றிதழான (Einstein World Record) என்ற சான்றிதழ்களை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *