சிவகங்கை டிச, 25
திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார்.
மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் முதலியவற்றை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார். அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.