சிவகங்கை டிச, 21
திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் கட்டிட சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருப்பத்தூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் கண்ணன், முன்னாள் கட்டிட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.