பாகிஸ்தான் டிச, 25
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் பெண் உட்பட இரண்டு தற்கொலை படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வேகமாக ஓட்டி சென்றனர். அதனை காவல் துறையினர் தடுக்க முயன்ற போது அவர்கள் குண்டை வெடிக்க செய்தனர். இதில் பயங்கரவாதிகள் இருவர் காவலர் ஒருவர் என மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தாலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.