அமெரிக்கா டிச, 25
அமெரிக்காவில் வீசி வரும் பயங்கர பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படுகின்றன. இந்த பனிப்புயலுக்கு வெடிகுண்டு சூறாவளி என பெயரிடப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளது. இதுவரை இந்த பணி புயலுக்கு 12 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் பொதுமக்கள் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.