நெல்லை டிச, 24
எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பாளை பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை ஏற்பாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நிர்வாகிகள் லட்சுமணன், முத்து லட்சுமி, கற்பக வல்லி, தாஜுதீன், ஆனந்தி சரவணன், ஆனந்தராஜ் மற்றும் ராமர், லட்சுமி நாராயணன், காதர் மஸ்தான், முத்துக்குமார், அருள் ஜெய்சிங், புதியமுத்து, மற்றும் மகளிர் அணி செயலாளர் பேச்சியம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.