சென்னை டிச, 23
நவம்பர் மாதத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களின் பட்டியலை முன்னணி ஊடகமான ஆர்மேக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்த நிலையில், பிரபாஸ், இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து அக்ஷய் குமார், என்டிஆர், அல்லு அர்ஜுன், யாஷ், அஜித், மகேஷ் பாபு, ஷாருக்கான் மற்றும் ராம்சரண் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். அதிகப்படியாக தென்னிந்திய நடிகர்களை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.