திருப்பூர் டிச, 22
திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் குமார் வரவேற்று பேசினார். திருப்பூர் தெற்கு பகுதி துணைச் செயலாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு பகுதி துணைச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர் எஸ். சதீஷ்குமார், அமைப்பாளர் யுவராஜ் பங்கேற்றனர்.