புதுடெல்லி ஆகஸ்ட், 10
அரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் (உயிரி எரிபொருள்) ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொளி மூலம் நடக்கும் விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
உயிரி எரிபொருள் என்பது கூடுதல் வருவாய் உருவாக்க வாய்ப்பை வழங்குவதன் மூலம் வேளாண் பயிர்களின் கழிவுப்பொருட்களை பயன்படுத்துவது விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் உருவாக்க வாய்ப்பை வழங்குவதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கும். இந்தத் தொழிற்சாலை பணியில் ஈடுபடுவோருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதோடு, வைக்கோலை வெட்டுதல், கட்டுதல், இருப்புவைத்தல் போன்ற விநியோகத் தொடர் மூலம் மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கும்.
இந்தத் தொழிற்சாலையிலிருந்து திரவ வெளியேற்றம் இருக்காது. வைக்கோல் எரிப்பை குறைப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3 லட்சம் டன்னுக்கு சமமான கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைப்பதிலும் இது பங்களிப்பு செய்கிறது.
மேலும் தொழிற்சாலையின் அர்ப்பணிப்பு, நாட்டில் உயிரி எரிபொருளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க கடந்த பல ஆண்டுகளாக அரசால் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளின் ஒருபகுதி என்று அரசு தெரிவித்துள்ளது. எரிசக்தித் துறையை மேலும் செலவு குறைந்ததாக, எளிதில் கிடைக்கக் கூடியதாக, திறன் மிக்கதாக, நீடிக்க வல்லதாக மாற்றுவதற்கான பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியின்கீழ், இது அமைவதாக தெரிவித்துள்ளது.
தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர் என அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.நாட்டில் உயிரி எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலை அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.