சென்னை டிச, 21
தமிழக முழுவதும் உள்ள 31,210 அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்தால் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருப்பார்கள் என்ற வகையில் கல்வித்துறை தூய்மை பணிக்காக பள்ளி ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்க இருக்கிறது. இதற்காக ஆறு கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
