சென்னை டிச, 21
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வர்கள் தயாராகும் வகையில் தயாரித்து வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, கடந்த வாரத்தில் அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. ஆண்டுத் திட்ட அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-4 உள்பட சில பதவிகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. அதிலும் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு மட்டும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும், தேர்வை பொறுத்தவரையில் 2024-ம் ஆண்டு தான் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.