சென்னை டிச, 19
நம்ம ஸ்கூல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். மேலும் 7500 கோடி மதிப்பில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டமும் தொடங்கப்பட்டது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக தன்னார்வலர்களும் நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு உதவ முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.