சென்னை டிச, 20
மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களுக்கு சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். வங்கிக் கடன் இணைப்பு பெற்று தரும் நடவடிக்கையில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.