தஞ்சாவூர் டிச, 17
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
மேலும் அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை கொறடா கோவி செழியன், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை, அவர் பொருள் வாணிபாகளாக இயக்குனர் பிரபாகர், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்புரை ஆற்றினார்.