சென்னை டிச, 15
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாமாக வாய்ப்புள்ளதால், டிசம்பர் 19, 20, 21 தென் மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என எச்சரித்துள்ளது. மாண்டஸ் புயலால் வட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது போல், இந்த புயலால் தென் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
