சென்னை டிச, 14
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படுகிறது. சரியாக காலை 9.30 மணிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற உடன் முதலமைச்சர் முக. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
