தூத்துக்குடி டிச, 14
திமுக அமைச்சர் கீதாஜீவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. 1996 முதல் 2001 காலகட்டத்தில் தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவராக இருந்த அவர் மீதும் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் தந்தை பெரியசாமி மீதும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.