தூத்துக்குடி டிச, 13
தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பிரேமலதாவின் வழிகாட்டுதலின்படியும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் விஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட விஜயகாந்த் மன்ற செயலாளர் கோவில்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகி பெரியசாமி மற்றும் மறவன்மடம் ஊராட்சி நிர்வாகிகள், திரவியபுரம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.