சென்னை டிச, 13
விஜய் ஆண்டனி இயக்கி நடித்துவரும் படம் பிச்சைக்காரன் 2 இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் அருகே இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ட்ரோன் உதவியுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அனுமதி இன்றி ட்ரோன் பறக்க விட்டதால் படக்குழுவை சேர்ந்த மூவரை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.