கொழும்பு டிச, 13
கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது. இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது.
இதைத்தொடர்ந்து சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
மேலும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.