தூத்துக்குடி டிச, 11
அதிமுக எந்த காலத்திலும் திராவிட இயக்கமாக இருந்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நம் வீட்டுப் பிள்ளைகள் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அனைத்திலும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்த பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு அதிமுக செயல்படுவதாக விமர்சித்தார். மேலும் தி.மு.கவை பற்றி பொய்யான தகவல்களை மேடைக்கு மேடை அதிமுக பேசி வருவதாகவும் கனிமொழி தெரிவித்தார்.