நாமக்கல் டிச, 11
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி 6 பயனாளிகளுக்கு ரூ.74,297 மதிப்பிலான திருப்பப்பட்ட காசோலைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் திரு.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அபர்ணா தேவி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.