நாமக்கல் டிச, 9
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். மேலும் 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
இதில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சட்ட மன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.