நாமக்கல் டிச, 13
நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ காய்கறிகள் 4,410 கிலோ பழங்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 555 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவை ரூ.8.11 லட்சத்திற்கு விற்பனையானது.