சென்னை டிச, 9
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது டாலரின் மதிப்பானது தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து தங்கம் விலையானது உச்சம் எட்டி வருகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 5047 ரூபாயாகவும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 40,376 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து, 5507 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 270 ரூபாய் அதிகரித்து, 55,060 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.20 ரூபாய் அதிகரித்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1200 ரூபாய் அதிகரித்து, 72,500 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.