கள்ளக்குறிச்சி டிச, 8
மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்ன என்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற வேண்டும். 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்யக் கூடாது, கிராமங்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.