கள்ளக்குறிச்சி டிச, 6
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகர மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரிகுணா, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா, திருக்கோவிலூர் காவல் துணை ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார்.
இக்கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் ஒழிப்பு மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.