கள்ளக்குறிச்சி டிச, 2
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் காவல்துறை ஏட்டு சிவமுருகன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கூத்தக்குடியில் இருந்து அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சஞ்சீவி ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் கோழி மற்றும் வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
அதன்படி ஆனந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.