Spread the love

கள்ளக்குறிச்சி நவ, 30

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு நிலைகளில் பணிரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பாஸ்ட் ட்ரேக் என்னும் நவீன முறை அறிமுகப்ப டுத்தப்பட்டு, சுங்க கட்டணம் வசூல் செய்துவருகின்றனர். இதனால் ஆட்களை குறைப்ப தற்காக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதை கண்டித்து கடந்த அக்டோபர் மாதம் 01-ந் தேதி முதல் தொடர்ந்து இன்று 60-வது நாளாக பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் மாநில, மத்திய அரசுகள் இது வரை இவர்களின் போராட்டத்தைப் பற்றி சிறிதும் கவலை ப்படாமல் செவி சாய்க்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில், முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுங்க ச்சாவடி ஊழியர்க ளுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *