தூத்துக்குடி டிச, 7
ஏசு நாதர் பிறந்த தினமான டிசம்பர் 25 ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து அந்த குடில்களில் ஏசுநாதர் சிலைகள் வைத்து மின் விளக்குகளால் அலங்கரித்து இருப்பார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சொரூபங்கள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயார் செய்யப்படுகிறது. சொரூபங்கள் தயார் செய்யப்பட்டு காய வைக்கப்படுகிறது. பின்னர் சொரூபங்களுக்கு வண்ணம் தீட்டப்படுகிறது.