கொலம்பியா டிச, 7
கொலம்பியாவில் உலகப் பழுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2022 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் ஜானு கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் 200 கிலோ எடை தூக்கி பதக்கத்தை தட்டி சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன வீராங்கனை ஜியாங் ஹூய்ஹூவா 26 கிலோ தூக்கி இந்த போட்டியில் தங்க பதக்கம் என்றார்.