துபாய் டிச, 4
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சார மையம் சார்பாக துபாய் சபீல் பூங்காவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் தலைமையில் ஈமான் துணைத் தலைவர் கமால் பொருளாளர் பிலாக் துளிப் எஹியா, ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் , கல்விக்குழு செயலாளர்
பைசூர் ரகுமான்உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வக்புவாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் துபாய் இந்திய துணை தூதர் (பொறுப்பு) ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் நிறுவனங்கள் சமூக நல ஆர்வலர்கள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக மற்றும் அனைத்து மதத்தினர் குடும்பங்களோடு கலந்துகொள்ள ஏராளமான விளையாட்டு நிகழ்ச்சிகள், பரிசளிப்பு , கலந்துரையாடல் உள்ளிட்டவையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன
இந்நிகழ்ச்சியினை மக்கள் ஆர்.ஜே சாரா தொகுத்து வழங்க அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.