துபாய் டிச, 4
ஐக்கிய அரபு அமீரக துபாயில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நலச்சங்கம் சார்பாக அவ்வூரை சேர்ந்தவர்களால் நடந்த அமீரகத்தின் 51வது தேசிய தின நிகழ்ச்சி அமீரகத்தில் உள்ள உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சீனி ஜலால் மற்றும் சீனி இப்ராஹிம் தலைமையில் தேவிபட்டின நலச்சங்க தலைவர் ஃபலில் வரவேற்புரை வழங்கி நலச்சங்கத்தின் துபாய் மண்டல செயலாளர் சமீர் நலச் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கிரீன் கிலோப் ஜாஸ்மின், தினககுரல் தேசிய தின இதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் இனண-ஆசிரியர் நஜீம் மரிக்கா, எழுத்தாளர் வி. கலத்தூர் கமல் பாட்ஷா மூத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுவாமிநாதன், ஆயர்பாடி முஜீபுர்ரஹ்மான், அபூபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகச்சியை S.P.S நிஜாம் தொகுத்து வழங்க ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் மற்றும் செய்யது சிறப்புரை ஆற்றினர். மேலும் வந்திருந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கி ஆஷிக் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.