கேரளா டிச, 1
கேரளாவிலிருந்து கார்த்திகை தீபத்தை ஒட்டி விளக்குகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
கேரளாவிலிருந்து வந்துள்ள சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உள்ளூர்களில் பெரிய விளக்குகள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய விளக்குகள் 150 ரூபாய் வரை விற்கிறது.
மேலும் பல்வேறு வடிவங்களிலும் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. புதிதாக விநாயகர் சிலையுடன் கூடிய ஐந்து முக மண் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த விளக்கு 50 முதல் 100 ரூபாய் வரை விற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர்.