தஞ்சாவூர் டிச, 1
பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.