தேனி டிச, 1
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023ம் ஆண்டுக்குரிய ஆலோசனைக் கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி 1.1.2023 ம் ஆண்டு தேதியை தகுதி நாளாக கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் பணிகள் நடைபெற்ற நிலையில், தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 5,42,411 ஆண் வாக்காளர்களும், 5,63,631 பெண் வாக்காளர்களும், 193 இதர வாக்காளர்களும் மொத்தம் 11,06,235 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியின் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு வாக்காளர் பட்டியல் பொறுப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் வாக்காளர் வட்டாட்சியர் ஆகியோர் அரசியல் கட்சியினர் மற்றும் உறுப்பினர் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.