குஜராத் டிச, 1
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவும் 93 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இங்கு பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என முன்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.