திருப்பூர் நவ, 30
திருப்பூர் தாராபுரம் மெயின் ரோடு அரண்மனைபுதூர் மெயின் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதை கேள்விப்பட்டதும் 46 வது அதிமுக மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி உறுப்பினர், 46வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர், கண்ணப்பன் அதிகாரிகள் பணியாளர்களுடன் பார்வையிட்டார்.
ஆனால் பலமுறை இந்த குழாயை சரி செய்தும் உடைந்து கொண்டே இருக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். உடனடியாக மெயின் குடிநீர் குழாயை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து இச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.